நாம் தற்போது உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் பெரும் அளவிற்கு தொழிற்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளோம்.

இணையத்தளத்தில் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் திறன் பெருமளவில் விரிவடைந்துள்ளது, ஆனால் இது தனியுரிமை பாதுகாப்பை மேலும் சிக்கலாக்கி உள்ளது, இணையத்தில் ஒரு தனிநபரின் ஆன்லைன் இயக்கங்களை அரசாங்கம் மட்டுமல்ல பெருநிறுவனங்களும் கண்காணிக்கின்றன.

இதனை தடுக்க டோர் (Tor) என்ற மென்பொருளானது, பயனர்கள் இணையத்தளத்தை தங்களின் பெயர் அடையாளம் இல்லாமல் (Anonymously) காண அனுமதிக்கிறது.

டோர் முதலில் The Onion Router என்று அழைக்கப்பட்டது, ஏனென்றால் அது பயனர் செயல்பாட்டைப் பற்றிய தகவலை மறைக்க Onion routing என்ற ஒரு நுட்பத்தை பயன்படுத்துகிறது.

இது Google Chrome போன்று இணைய உலாவியாகும் (web browser), இதனை இலவசமாக இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பயனரின் தனியுரிமையை பாதுகாப்பதற்கான கருவியாக டோர் கருதப்பட்டாலும், இது வங்கி மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, அடையாள எண் திருட்டு மற்றும் போலி நாணய பரிமாற்றம், ஆயுதங்கள் மற்றும் மருந்துகள் (Drugs) போன்றவற்றை கள்ளச்சந்தையில் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்