கடந்த ஆண்டுகளில் நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கியிருந்தால், இதில் சார்ஜிங்காக ஒரு புதிய போர்ட் உள்ளதை பார்த்திருப்பீர்கள். இது USB Type-C என்று அழைக்கப்படுகிறது.

பழைய மைக்ரோ-யுஎஸ்பி வடிவமைப்புகளில் உள்ளதை விட இந்த புதிய USB Type-C-இல் புதிய அம்சங்கள் உள்ளன அவற்றைப் பற்றி காண்போம்.

குறிப்பு

USB Type-A 1996 ஆம் ஆண்டிலும் USB 2.0 Type-B 2000 ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

USB Type-C 2014 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.

இந்த புதிய அமைப்பானது தரவு பரிமாற்ற வேகம் (Data transfer) மற்றும் மின் விநியோகம் (Power delivery) இரண்டிலும் சில முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது.

கூடுதலாக இது 3.5mm Headphone jack மற்றும் HDMI கேபிளுக்கு மாற்றாக உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்