உங்கள் குழந்தை YouTube ஐப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது
YouTube கிட்ஸ் செயலி.

இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அவர்கள் ஆர்வமாக உள்ள தகவல்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.

YouTube கிட்ஸ் நன்கு வடிகட்டப்பட்ட (Filters option) முடிவுகளை மட்டுமே தருகிறது, எனவே உங்கள் குழந்தைகள் பாதுகாப்பான உள்ளடக்கத்தை மட்டுமே அணுக முடியும். மேலும் இது Parental controls போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

YouTube கிட்ஸ் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது

Step 1: முதலில், YouTube கிட்ஸ் செயலியை உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளவும்.

Step 2: அடுத்தாக பெற்றோர், குழந்தை பிறந்த ஆண்டை குறிப்பிட்டு, அவர்களுக்கான சுயவிவரத்தை (Profile) உருவாக்கி கொள்ளவும்.

Step 3: அடுத்து, நீங்கள் உங்கள் கூகுள் கணக்கிள் உள்நுழைந்து, திரையில் தோற்றும் விதிமுறைகளுக்கு ஒப்புதல் கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி திரையில் தோன்றும் வீடியோக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

குழந்தைகளுக்கான இந்த வீடியோ பகிர்வு செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் உள்ளது, இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

YouTube கிட்ஸ் மொபைல் செயலியை பதிவிறக்க YouTube Kids – Apps on Google Play

மற்றும் iOS இயங்குதளத்திற்கு YouTube Kids on the App Store

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்