கூகுள் டிரைவ் மூலம் வாட்ஸாப்பில் உள்ள உங்களின் சாட் மெசேஜ்களையும் மற்றும் போட்டோ, வீடியோ போன்ற உங்களின் பைல்களையும் பாதுகாத்து வைத்து கொள்ள முடியும், ஒருவேளை நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு தொலைபேசியினை மாற்றினாலும் உங்களின் டேட்டா அல்லது தகவல்கள் பாதுகாக்கப்படும். சரி, இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

கூகுள் டிரைவினை வாட்ஸாப்புடன் இணைப்பதற்கு குறைந்தபட்ச தேவைகள்

  • முதலில், உங்கள் ஸ்மார்ட் போன் கண்டிப்பாக உங்களின் கூகுள் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • அடுத்து ,கூகுள் டிரைவ் செயலியை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.

கூகுள் டிரைவினை வாட்ஸாப்புடன் இணைப்பதற்கான வழிமுறைகள்

STEP 1: வாட்ஸாப்பினை திறக்கவும்.

STEP 2: Settings > Chats > Chat backup இதில் Back up to Google Drive என்பதனை தட்டவும். இதில் உங்களுக்கு விருப்பங்கள் காண்பிக்கப்படும் அதில் ஒன்றை கிளிக் செய்யவும்.

STEP 3: இதில் உங்களின் கூகுள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

STEP 4: இறுதியாக Back up over என்ற ஆப்சன் இருக்கும், இதில் நீங்கள் விரும்பும் நெட்வொர்க்கை தேர்வு செய்யலாம். பொதுவாக Wi-Fi யை தேர்ந்தெடுப்பது சிறந்தது, அவ்வளவுதான்.

சரி, இப்போது கூகுள் டிரைவில் தகவல்களை பதிவேற்றிவிட்டோம், ஒருவேளை நீங்கள் மொபைல் போனை மாற்றினால் தகவல்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதனை காண்போம்.

இதற்கு முன்பதாக நீங்கள் தகவல்களை பதிவேற்றிய போது பயன்படுத்திய கூகுள் கணக்கு உங்களின் மொபைல் நண்பருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதிச் செய்து கொள்ளவும்.

பதிவேற்றிய தகவல்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள்

STEP 1: புதிதாக வாங்கிய மொபைலில் வாட்ஸாப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

STEP 2:  உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்த்த பிறகு, கூகுள் டிரைவிலிருந்து உங்கள் அரட்டைகள் மற்றும் மீடியாவை மீட்டெடுப்பதற்கு உங்களுக்கு அறிவுறுத்தப்படும். இதில் RESTORE என்ற ஆப்ஷனை தட்டவும்.

STEP 3: மீட்பு செயல்முறை முடிந்ததும், NEXT என்பதை தட்டவும். இப்போது உங்களுக்கு உங்களின் சாட்டிங் மெசேஜ்கள் காட்டப்படும்.

அவ்வளவுதான், இதன் மூலம் நீங்கள் பழைய போனில் எப்படி வாட்ஸாப்பை பயன்படுத்துனீர்களோ, அதே மாதிரி மீண்டும் எந்த வித தகவல்களையும் இழக்காமல் உங்களின் புதிய போனில் வாட்ஸாப்பை பயன்படுத்த முடியும்.

ஒருவேளை, கூகுள் டிரைவுடனான இணைவை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதனை டெலீட் செய்யவும் வழி உள்ளது, இனி அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

கூகுள் டிரைவிலிருந்து வாட்ஸாப்பின் தகவல்களை நீக்குவதற்கான வழிமுறைகள்

STEP 1: கூகுள் டிரைவ் வலைத்தளத்திற்கு சென்று உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைக.

STEP 2: மேல் வலது மூலையில் உள்ள கியர் ஐகானைக் கிளிக் செய்க, Settings > Manage Apps.

STEP 3: இந்த பட்டியலில் வாட்ஸாப்பை கண்டுபிடிக்கவும்.

STEP 4: நீங்கள் பட்டியலில் வாட்ஸாப்பை கண்ட பிறகு, இதில் உள்ள Hidden app data என்ற ஆப்ஷனை காண்பீர்கள். இது தோன்ற சில நிமிடங்கள் ஆகலாம்.

STEP 5: இதில் OPTIONS > Delete hidden app data > DELETE என்பதை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான், நீங்கள் இப்பொழுது கூகுள் டிரைவிலிருந்து வாட்ஸாப்பின் தகவல்களை நீக்கி விட்டீர்கள்.

இதைப் போன்று வாட்ஸாப்பிலும் கூகுள் டிரைவுடனான இணைவை தடுக்க, உங்கள் மொபைல் போனில் வாட்ஸாப்பை திறந்து Settings > Chats > Chat backup பகுதிக்கு சென்று Back up to Google Drive என்பதனை தட்டவும். இதில் Never என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இதன் மூலம் நீங்கள் கூகுள் டிரைவுடனான இணைவை தடுத்து விட்டீர்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்