என்னதான் வாட்ஸாப்ப், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரித்தாலும் அதன் முக்கிய செயல்பாடாக இருப்பது மெசேஜ் அனுப்புவது தான். காலை வாழ்த்துக்கள், நகைச்சுவை மற்றும் முக்கியமான செய்திகளைப் பெற மக்கள் அதிகமாக டெஸ்க்ட் (Text) மெசேஜ்களையே பயன்படுத்துகிறார்கள். மேலும் இவ்வற்றை சுவரசியமாக அனுப்ப என்னென்ன வழிகள் உள்ளன என்பதனை பார்ப்போம்.

Send colorful Messages

ஆண்ட்ராய்டு மொபைல்போன் பயன்படுத்துபவர்களுக்கான பிரத்யேகமான மற்றொரு தந்திரம் மெசேஜின் வண்ணத்தை மாற்றுவது. எனினும், வாட்ஸாப்ப் அதிகாரப்பூர்வமாக இந்த அம்சத்தை ஆதரிக்கவில்லை. இதற்கு BlueWords என்று அழைக்கப்படும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த பயன்பாட்டின் உதவியுடன் மெசேஜின் நிறத்தை நீல நிறமாக மாற்ற முடியும்.

உங்கள் மொபைலில் இந்த செயலியை பதிவிறக்கி, தட்டச்சு பகுதியில் மாற்ற விரும்பும் மெசேஜினை உள்ளிடவும். பின்னர் ப்ளூ விருப்பத்தைத் தட்டவும், பின்னர் இதனை காப்பி (copy) செய்து உங்கள் வாட்ஸாப்பில் பயன்படுத்திக்கொள்ளவும்.

குறிப்பு: மறுமுனையில் இருப்பவர் இந்த பயன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆண்ட்ராய்டுக்கான இச்செயலியை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் BlueWords – Apps on Google Play

Stylish Font

வாட்ஸாப்ப் மோனஸ்பேஸ் (Monospace) தவிர வேறு எந்த ஃபாண்டினையும் (Font) ஆதரிக்கவில்லை, நீங்கள் மெசேஜின் ஃபாண்ட்களை மாற்ற மேலே குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு பயன்பாட்டினேயே பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பயன்பாடு மேலும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் நீங்கள் சாதாரணமாக மெசேஜினை டைப் செய்து, விரும்பிய ஸ்டைலினை தேர்வு செய்து அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் இச்செயலியை பயன்படுத்தி வாட்ஸாப்பின் ஸ்டோரிகளுக்கான ஃபாண்டினையும் மாற்ற முடியும்.

Type using emojis

சிறப்பு மெசேஜ்களுக்காக இதனை நீங்கள் பயன்படுத்தலாம், இதற்கு நீங்கள் முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் ஈமோஜி லெட்டர் மேக்கர் (Emoji Letter Maker) எனும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை இன்ஸ்டால் பண்ண வேண்டும்.

அடுத்து, இதில் நீங்கள் டைப் செய்ய விரும்பும் மெசேஜினையும் மற்றும் ஈமோஜினையும் உள்ளிடவும். பின்னர் பிளஸ் ஐகானைப் பயன்படுத்தி, உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து அதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.

ஆண்ட்ராய்டுக்கான இச்செயலியை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் Emoji Letter Maker – Apps on Google Play

பின்வருபவை பெரும்பாலானோர் அறிந்ததே, தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Make Text Bold

வாட்ஸாப்ப் ஒரு உள்ளமைக்கப்பட்ட அம்சத்தை வருகிறது, அது தான் டெஸ்க்டை போல்டாக (BOLD) மாற்றுவது. நீங்கள் சில மெசேஜ்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றால் இதனை பயன்படுத்தலாம்.

அவ்வாறு செய்வதற்கு, செய்திக்கு முன்னும் பின்னும் ஒரு நட்சத்திரத்தை (*) சேர்க்கவும். நீங்கள் அதை செய்தவுடன், மெசேஜின் டெஸ்க்ட் போல்டாக மாற்றம் பெறும்.

எடுத்துக்காட்டுக்கு *techyhunter*

Make Text Italic

இதேபோல், நீங்கள் டெஸ்க்டை இத்தாலிக் (italic) வடிவத்திற்கு மாற்ற விரும்பினால், செய்திக்கு முன்னும் பின்னும் ஒரு அடிக்கோடு (_) சேர்க்கவும். அவ்வளவுதான்.

எடுத்துக்காட்டுக்கு _techyhunter_

Strikethrough Message

சில நேரங்களில் நீங்கள் ஒரு திருத்தம் அல்லது மறுதொடக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு strike through வை பயன்படுத்தலாம். உங்கள் மெசேஜில் ஒரு கோடினை சேர்க்க, மெசேஜின் இரு பக்கங்களிலும் ஒரு டில்ட் (~) வைக்கவும்.

எடுத்துக்காட்டுக்கு ~techyhunter~

Combine formatting

இதன் மூலம் நீங்கள் ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு வெவ்வேறு வடிவமைப்புகளை கொடுக்கலாம். ஆனால் இதில் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் அவ்வற்றின் வரிசை. முதலில் பயன்படுத்தப்படும் குறியீடு கடைசியாக பயன்படுத்தப்பட்டு மூடப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு *~_techyhunter_~*

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்