உலகின் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸாப்ப் புது புது வசதிகளை அறிமுகம் படுத்துக் கொண்டே இருக்கிறது, அதில் தற்போது மிகவும் எதிர் பார்க்கப்பட்ட க்ரூப் அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்சப்பில் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருந்தாலும் தற்போது தான் க்ரூப் காலிங் வசதியை வாட்ஸாப்ப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒரேநேரத்தில் நான்கு பேர் வரை பேசிக்கொள்ள முடியும்.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது

முதலில் நமது வாட்ஸாப்ப் contact-இல் உள்ள யாருக்கேனும் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்ய வேண்டும்.

அவர் நமது அழைப்பை ஏற்றவுடன் உங்களுக்கு ‘add person’ என்ற Option மொபைல் திரையில் தோன்றும், இதனை அழுத்தி உங்கள் மற்றோரு நண்பரையும் அழைப்பில் இணைக்கலாம்.இவ்வாறு ஒரேநேரத்தில் நான்கு பேர் வரை பேசிக்கொள்ள முடியும்.

இவ்வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளிகளுக்கு அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது, வாட்சப்பை அப்டேட் செய்து கொள்வதன் மூலம் நீங்களும் இந்த வசதியை பெறலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்