வாட்ஸ்அப் app-ல் போலி message-கள் அதிகளவு பகிரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி message-களை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் app-ல் அறிமுகம் படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் message-களில் உள்ள வெப்சைட் முகவரியை கொண்டு வெப்சைட் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் வாட்ஸ்அப் ஏதேனும் போலி வெப்சைட் Link-ஐ கண்டறிந்தால், குறிப்பிட்ட message-களை சிவப்பு நிறத்தில் குறிப்பிடும், என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இதுவரை போலி message-களை முடக்க வாட்ஸ்அப் மேற்கொண்ட நடவடிக்கைகள்:

1. வாட்ஸ்அப் app-ல் நமக்கு தெரியாதவர்களை நாம் பிளாக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2. வாட்ஸ்அப் Group-களில் யார் யார் தகவல்களை பரிமாற வேண்டும் என்பதை க்ரூப் அட்மினே முடிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
3. Group-களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் க்ரூப்களில் சேர்க்கும் வசதி முடக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்