வாட்சப்பில் தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கு  வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் வரும் பார்வார்டு செய்திகளின் அளவு அளவே இல்லாமல் அதிகரித்துவிட்டது, இந்நிலையில், ஒருவர் மற்றோருவருக்கு அனுப்பும் செய்திகள் பார்வார்டு செய்தியாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டும் வசதி வாட்ஸ் ஆப்பின்  இந்த புதிய அப்டேட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த செய்திகள்  நேரடியாக டைப் செய்யப்பட்டதா அல்லது வேறு ஒருவரிடம் இருந்து நமக்கு அனுப்பப்பட்டதா என்பதை கண்டறியமுடியும். இதன் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவது அதிக அளவில் குறையும் என்று வாட்ஸாப்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த செய்திகளில் லிங்குகள் இருக்குமேயானால் அவை  சரியானவையா ? அல்லது போலியான செய்திகளா என்பதை கண்டறியும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் செய்திகளில் தவறான லிங்குகள் இருந்தால், சிவப்பு டிக் மூலம் பயனாளிகளை எச்சரிக்கும்.

இதனால் வதந்திகள் பரவுவதை தவிர்க்கலாம் என வாட்ஸாப்ப் நிறுவனம் தெரிவிக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்