ஜியோ ஸ்டோரில் வாட்ஸப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜியோ போன் வைத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் இப்போது வாட்ஸப் சேவையை இதன் மூலம் பயன்படுத்த முடியும்.

ஜியோ போனில் பயன்படுத்தப்படும் KaiOS க்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் உள்ளதை போன்று ஜியோவின் வாட்சப்பிலும் என்ட்-டூ-என்ட் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் உள்ளது. வாய்ஸை ரிக்கார்டு செய்து அனுப்பும் வசதி மற்றும் குரூப் கன்வர்சேஷன் போன்ற வசதிகள் இதிலும் இடம் பெற்றுள்ளன.

ஆனால் நேரடியாக வாய்ஸ் கால், வீடியோ கால் போன்ற வசதிகளை இதில் பயன்படுத்த முடியாது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்