வாட்ஸாப் இவ்வருடத்தின் தொடக்கத்தில் வாட்சப் பேமென்ட் என்ற முறையை அறிமுகம்படுத்தியது.

ஆனால் வாட்சப் பேமென்ட் இந்தியாவில் இன்னும் சோதனை முயற்சியில் தான் உள்ளது, முன்னோட்டமாகச் சோதனை தொடங்கினாலும் இன்னும் வாட்ஸ்ஆப் பேமென்டுக்கு இந்தியாவில் மத்திய அரசின் அனுமதி அளிக்க வில்லை, இந்த தாமதத்தால் போட்டி நிறுவனங்களான  Paytm மற்றும் கூகுளின் Tez ஆகியவை முன்னேறி வருகின்றன.

வாட்சப் பேமென்டில் பயனாளிகளின் தகவல்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது என்ற அடிப்படையில் இந்தியா அரசு இதற்கு அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்தி வருகிறது..

பேஸ்புக் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மார்க் சக்கர்பெர்க் அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார். அதே நேரத்தில் பிற நாடுகளிலும் வாட்சப் பேமென்டை அறிமுகப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்