வாட்ஸாப்ப் பயனாளிகளால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட Picture-In-Picture mode அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபரில் இந்த அம்சம் வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர்களுக்கு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இதன் சேவை மேலும் விரிவு படுத்தப்பட்டு அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.

வாட்ஸாப்பின் 2.18.380 வேர்சனில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, Picture-In-Picture mode அம்சத்தை பெறாதவர்கள் உடனே உங்களின் வாட்ஸாப்பை அப்டேட் செய்துக் கொள்ளவும்.

Picture-In-Picture mode அம்சத்தின் பயன் என்ன

முன்பு வாட்ஸாப்ப் சாட்டில் இருக்கும் யூட்டூப் வீடியோவின் லிங்க்கினை அல்லது பேஸ்புக்கிலிருந்து ஷேர் செய்யப்பட்ட வீடியோவின் லிங்க்கினை நீங்கள் கிளிக் செய்தால், அவை நேரடியாக யூட்டூப் செயலிகே அல்லது பேஸ்புக்கிற்கோ உங்களை அழைத்துச் செல்லும். ஆனால் தற்போது வந்துள்ள வாட்ஸாப்பின் அப்டேட்டின் படி வீடியோக்களை அப்படியே நேரடியாக வாட்ஸாப்ப் சாட்டிலேயே பார்க்க முடியும்.

ஆனால் வாட்ஸாப்பின் இந்த Picture-In-Picture mode அம்சம் ஐபோன் பயனாளிகளுக்கு ஏற்கனவே இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ட்ராய்டின் சமீபத்திய வாட்ஸாப்பின் PiP அம்சத்தின் மூலம், வாட்ஸாப்ப் சாட்டில் ஷேர் செய்யப்படும் யூட்டூப் அல்லது பேஸ்புக் வீடியோக்களை நேரடியாக வாட்ஸ்அப் சாட்டிலேயே கண்டு கழிக்க முடியும், மேலும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திரையில் வீடியோ நகர்த்தலாம் மற்றும் வீடியோவின் அளவை அட்ஜஸ்ட் செய்யலாம். இந்த அம்சம் வாட்ஸாப்பின் தனிப்பட்ட அரட்டை (Individual chats) மற்றும் குழு அரட்டைகளிலும் (Group chats) செயல்படுகிறது.

நீங்கள் வாட்ஸாப்பின் இந்த Picture-In-Picture mode அம்சத்தை அனுபவிக்க, வாட்ஸாப்பில் எந்த வித செட்டிங்க்ஸையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களின் வாட்ஸாப்பை அப்டேட் செய்துக் கொண்டாலே போதுமானது. மேலும் இதில் உள்ள சிறப்பு அம்சம், நீங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டே, உங்களால் சாட்டிங்கையும் தொடர முடியும்.

கூடுதல் தகவல்:- வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர் ஆவது எவ்வாறு

உங்களில் யாரேனும் வாட்ஸாப்பின் இந்த அம்சத்தை பெற்று விட்டீர்களா , எங்களுக்கு உங்களின் அனுபவத்தை கமெண்ட் மூலம் ஷேர் செய்யவும்.

யூட்டூப்பிலும் உள்ள Picture-in-Picture mode அம்சம், அது பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்