வாட்ஸாப் நிறுவனம் தொடர்ந்து பல புதிய மாற்றங்களை எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.

அந்த வரிசையில் தற்போது இரண்டு புதிய வசதிகள் வரவிருக்கின்றன அவை Dark Mode, மற்றொன்று Swipe to Reply. இந்த வசதிகள் வாட்ஸாப்பின் 2.18.283 வெர்ஷனில் இடம்பெறப்போகிறது.

Swipe to Reply ஆப்ஷனை கடந்த வருடம் iOS பயனர்களுக்கு வாட்ஸாப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது, தற்போது ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திளும் அப்டேட் ஆகவுள்ளது. இதன்மூலம், உங்கள் நண்பர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு எளிதாக ரிப்ளை செய்ய முடியும். எடுத்துக்காட்டாக மெசேஜை வலதுபுறம் ஸ்வைப் செய்தாலே, ரிப்ளை வசதி வந்துவிடும்.

இதன் மூலம் நீங்கள் உடனடியாக பதில் அனுப்ப முடியும்.

இரண்டாவதாக Dark Mode வசதி

இதன்மூலம் நீங்கள் உங்கள் வாட்ஸாப்பின் Theme மை white லிருந்து Dark Mode க்கு மாற்றிக் கொள்ள முடியும்.

இது போன்ற வசதி ஏற்கெனவே யூடியூப் செயலியில் அறிமுகமாகியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்