வாட்ஸாப்ப் இந்தியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான வதந்திகள் வாட்ஸாப்பில் பரவுவதை தவிர்க்க, வாட்ஸாப்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, செய்தித்தாள் விளம்பரங்களைத் தொடங்கி, பின்னர் ரேடியோ பிரச்சாரங்கள் வரை, பயனர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்க்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, ஆகஸ்ட் 29 ம் தேதி, பிஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் உள்ள அனைத்து இந்திய வானொலி நிலையங்களிலும் வாட்ஸாப்பை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளம்பரம் செய்யப்பட்டது.

பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டம் செப்டம்பர் 5 அன்று அசாம், திரிபுரா, மேற்கு வங்காளம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒரிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் உள்ள வானொலி நிலையங்களில் தொடங்கியது.

தற்போது மூன்றாவது கட்டமாக தொலைக்காட்சி பிரச்சாரத்திற்காக வாட்ஸாப்ப், தயாரிப்பாளர் ஷீரா குஹா தக்ருதத்துடன் (Shirsha Guha Thakurta) இணைந்து, மூன்று 60 விநாடிக்கான பிரச்சார படங்களை உருவாக்கி உள்ளது, இதில் வாட்ஸாப்பை எவ்வாறு பயன்படுத்துவது ஆபத்தான வதந்திகளை எவ்வாறு தெரிந்து கொள்வது போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த மூன்று படங்களையும் ஆங்கிலத்திலும், ஹிந்தி மொழியிலும் நீங்கள் பார்க்கலாம். இதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பயன்படுத்துக் கொள்ளவும்.

வாட்ஸாப்பின் டிவி விளம்பரங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னர், இந்தத் திரைப்படம் தொலைக்காட்சி, பேஸ்புக் மற்றும் யூட்டூபில் போன்ற தளங்களில் ஒன்பது மொழிகளில் கிடைக்கும், என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இது 2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலுக்கு தயார் செய்ய ஒரு முயற்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பிரபலமான தகவல்தொடர்பு தளமான வாட்ஸாப்பில் பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் நாட்டின் பல சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான தலை வலியை உண்டாக்குகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியா மட்டுமில்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் வாட்ஸாப்பிடம் பல முறை முறையிடுள்ளன, இதற்காகவே இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படமும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மற்றும் வாட்சப்பில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், மேலும் தெரியாத நபர்களை வாட்ஸாப்பில் எவ்வாறு பிளாக் செய்வது போன்ற வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும், வாட்ஸாப்பில் செய்திகளை ஷேர் செய்வதில் பல மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளன. அவை ஒருவேளை உங்கள் நண்பர் உங்களுக்கு ஏதேனும் பார்வேர்டெட் மெசேஜ் அனுப்பி இருந்தால், சாட்டின் தொடக்கத்தில் இந்த மெசேஜ் Forwarded மெசேஜ் என்று உங்களுக்கு அடையாளப்படுத்தப்படும். இதன் மூலம் ஓரளவிற்கு போலிகளை தவிர்க்கலாம்.

மேலும் வாட்ஸாப்பில் தகவல்கள் அதிகளவு ஷேர் செய்யப்படுகின்றன, இதனை கட்டுப்படுத்துவதற்க்கு ஒரு நபர் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட அளவு நபர்களுக்கு மேல் ஒரு மெசேஜை பார்வேர்டு செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சந்திப்பில் யூனியன் ஐ.டி. அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் (Union IT Minister Ravi Shankar Prasad), வாட்ஸப்பின் CEO கிறிஸ் டேனியல்ஸிடம் (Chris Daniels) வாட்ஸாப்பில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்