காலத்திற்க்கு ஏற்றார் போல் பல புதிய அப்டேட்களை அறிமுகப் படுத்தி வருகிறது வாட்ஸ்அப், இதில் சில வசதிகள் ஏற்கெனவே ஐபோன் பயனாளிகளுக்கு வந்துவிட்டன, சில வசதிகள் மட்டும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்காக சோதனை முயற்சியில் உள்ளது, புதிதாக வாட்சப்பில் என்னென்ன வசதிகள் வரவிருக்கின்றன என்று பார்ப்போம்.

1. ​​Picture in Picture mode

தற்போது வாட்ஸ்அப் சாட்டில் இருக்கும் வீடியோ லிங்க்குகளை கிளிக் செய்தால், அவை மொபைல் போனின் பிரவுசரில்தான் ஓப்பன் ஆகும். இதுவே YouTube வீடியோவாக இருந்தால் அது YouTube செயலிகே உங்களை அழைத்துச் செல்லும்.

இதற்கு ஒரு தீர்வாக, இனிமேல் வரவிருக்கும் வாட்ஸாப் அப்டேட்டில் வீடியோக்களை அப்படியே நேரடியாக வாட்ஸ்அப் சாட்டிலேயே பார்க்க முடியும்.

2. Stickers

வாட்ஸாப் இந்த ஸ்டிக்கர் வசதிக்கு பிஸ்கட் எனப் பெயர் வைத்துள்ளது. தற்போது பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே இவ்வசதி வந்துள்ளதாக WABetainfo அறிவித்துள்ளது. முதலில் இமோஜிக்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் பின்னாளில் Gif வசதியை பயனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்ததாக ஸ்டிக்கர் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது வாட்ஸாப்.

3. Image notification

தற்போது வாட்சப்பில் நோட்டிபிகேஷன்கள் அனைத்தும் வெறும் டெக்ஸ்ட்டாக மட்டும்தான் வருகிறது. இனிமேல் இனி வரும் அப்டேட்டில், இமேஜ் நோட்டிபிகேஷன்களை வழங்கவிருக்கிறது வாட்சப்.

எடுத்துக்காட்டுக்கு உங்கள் நண்பர் ஒருவர் உங்களுக்கு ஒரு இமேஜ் ஒன்றை அனுப்பினால், இதனை நோட்டிபிகேஷன் பகுதியில் சிறிய அளவில் பார்க்க முடியும். ஏற்கெனவே இவ்வசதி பெரும்பாலான செயலிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்