இந்த காலக்கட்டத்தில் இன்டர்நெட் என்ற சொல்லை அறியாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு இன்டர்நெட்டின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைத்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் தளங்கள்.

முன்பு படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை டிவியில் பார்த்து வந்தோம், இன்று தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் எங்கு சென்றாலும் நாம் இருக்கும் இடத்திலேயே நாம் விரும்பும் நிகழ்ச்சிகள் பார்க்கிறோம், இவ்வளவு மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டை ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மாபெரும் சந்தையாக பார்க்கின்றன. இவர்களுக்குள் சிறந்த சேவையை வழங்குவதில் போட்டி நிலவுகிறது.

நாம் இத்தொகுப்பில் இந்தியாவில் உள்ள ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் முக்கிய தளங்கள் குறித்து காண்போம்

ஹாட் ஸ்டார்

ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவை தான் ஹாட் ஸ்டார், தொடக்கத்தில் ஸ்டார் நிறுவனத்திற்கு சொந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது, பின்னாளில் ஹாட்ஸ்டாரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஐபிஎல் தான், சோனியிடம் இருந்து ஸ்ட்ரீமிங் உரிமத்தை வாங்கி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பியது. மேலும் இதில் எண்ணற்ற ஹாலிவுட் படங்களும், பிறமொழி படங்களும் இடம் பெற்றுள்ளன.

உலகில் உள்ள அனைவராலும் பார்க்கப்படும் நிகழ்ச்சியான Game Of Thrones ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது. இதன் மற்றுமொரு சிறப்பு.அம்சம் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை அல்லது படங்களை இலவசமாக கண்டு மகிழலாம்.மேலும் இதில் சிறப்பு சந்தாக்களும் உள்ளன, ப்ரீமியம் சந்தா மாதம் ரூபாய் 199, வருட சந்தா ரூபாய் 999 செலுத்தி லைவ் ஸ்போர்ட்ஸ்.போன்ற மேலும் பல நிகழ்ச்சிகளை காணலாம்.

அமேசான் ப்ரைம் வீடியோ

ஆங்கிலப் படங்கள், சீரிஸ்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதால், இந்தியர்களின் தவிர்க்க முடியாத தளமாக அமேசான் ப்ரைம் வீடியோ விளங்குகிறது. இதில் Breathe, Inside Edge போன்ற நம்மூர் சீரிஸ்களும் ஒளிபரப்பப்படுகின்றன, இது இந்திய இளைஞர்களை எளிதாகக் கவர்க்கிறது. இதில் வீடியோக்களை Ultra HD தரத்தில் பார்க்க முடியும்

அமேசான் ப்ரைம் வீடியோ சேவையை வாங்குபவர்களுக்கு இத்துடன் அமேசான் மியூசிக் மற்றும் அமேசான் ப்ரைம் டெலிவரி சேவையும் வழங்குகிறது அமேசான். மாதம் ரூபாய் 129, வருட சந்தா ரூபாய் 999 செலுத்தி ப்ரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷனை பெறலாம்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் இளைஞர்களை எளிதாகக் கவரும் நிகழ்ச்சிகள் உள்ளன என்ற போதிலும் குடும்பங்களை கவருவதற்கான நிகழ்ச்சிகள் ஹாட் ஸ்டாரின் நிகழ்ச்சிகளை ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளன, மேலும் இதில் லைவ் டிவி ஷோக்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ்கள் ஒளிபரப்பப்படுவதில்லை என்ற குறையும் உள்ளது.

அடுத்து அமேசான் ப்ரைம் வீடியோவை ஒப்பிடுகையில் ஹாட்ஸ்டாரின் ஸ்ட்ரீமிங் தரம் குறைவு தான், என்றாலும் இதில் அதிகமான இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. மேலும் இவ்விரு நிறுவனங்களும் தனது சேவைகளை ஆப் மூலமாகவும் மற்றும் இணையதளம்.மூலமாகவும் வழங்குகின்றன.

கூடுதல் தகவல்:- நெட்பிளிக்ஸ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்

நீங்கள் இதில் ஏதேனும் ஒரு ஸ்ட்ரீமிங் சேவையை பயன்படுத்துகிறீர்களா, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்