கூகுள் இமேஜஸின் சர்ச் வசதியில், View image என்ற ஆப்ஷன் தற்போது இல்லை யாராவது இதை கவனித்தீர்களா, கூகுளின் இமேஜ் சர்ச்சிலிருந்து View image என்ற ஆப்ஷனைத் தூக்கியதற்கான காரணம் என்ன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் சில மாற்றங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துவது வழக்கம் தான், எனினும் கூகுளின் இந்த மாற்றம் அதன் பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் மீது ரொம்ப காலமாக இருக்கும் குற்றச்சாட்டு, அது படைப்பாளிகளின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை என்பது, அதாவது நாம் கூகுள் இமேஜில் காப்புரிமை கொண்ட இமேஜ்களை எளிதாக டவுன்லோடு செய்ய முடியும், இதன் மூலம் உரிய அனுமதியின்றி மற்றவர்களின் படைப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும், இது குறித்து பலரும் கூகுள் நிறுவனத்திடம் புகார் அளித்தனர் அதில் ஒன்று தான் Getty Images என்ற நிறுவனம்.

Getty Images என்பது புகைப்படங்களை விற்பனை செய்யும் வலைத்தளம், இதில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் காப்புரிமை கொண்ட இமேஜ்கள், இவற்றை கூகுளின் இமேஜ் சர்ச் மூலம் பலரும் எளிதாக டவுன்லோடு செய்து பயன்படுத்தினர், இவ்வாறு அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்தினால், பயன்படுத்தியவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும், இதனால் கூகுள் நிறுவனத்திற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை, காரணம் புகைப்படங்களின் காப்புரிமை குறித்த விஷயங்கள் அனைத்தும் பயன்படுத்திய பயனாளிகளையே சாரும் என்பது கூகுளின் விதிமுறை.

சரி இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது, புகைப்படங்களை எவ்வாறு பாதுகாப்பது

இப்பிரச்னையை எடுத்துக்காட்டி ஐரோப்பிய கமிஷனிடம் Getty Images நிறுவனம் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து கூகுள், Getty Images நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அதன்படி கூகுளின் இமேஜ் சர்ச்சிலிருந்து View image என்ற ஆப்ஷனைத் தூக்கியது கூகுள் நிறுவனம். இதன் மூலம் முறையற்ற டவுன்லோடுகள் ஓரளவு தவிர்க்கப்படும்.

ஆனால் தற்போது கூகுளின் இமேஜ் சர்ச்சில் குறிப்பிட்ட புகைப்படங்களை தேடினால், அப்புகைப்படத்தின் பக்கத்தில் Visit என்ற ஆப்ஷன் மட்டுமே காட்டப்படுகிறது, ஒருவேளை நாம் இந்த புகைப்படத்தை டவுன்லோடு செய்ய விரும்பினால் அந்த புகைப்படம் உள்ள குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்றுதான் டவுன்லோடு செய்யமுடியும். ஒரு சில இணையதளங்கள் அவர்களின் புகைப்படங்களை டவுன்லோடு செய்வதற்கு பயனாளிகளிடம் பணம் வசூலிக்கின்றன.

இந்த மாற்றம் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்த போதிலும், படைப்பாளிகளைப் பொறுத்தவரை இது நல்ல விஷயம் தான், இதன் மூலம் காப்புரிமை கொண்ட இமேஜ்களை டவுன்லோடு செய்யப்படுவது ஓரளவு தவிர்க்கப்படும்.

View image என்ற ஆப்ஷனை மீண்டும் பெறுவது எப்படி

View image என்ற ஆப்ஷன் கூகுளின் இமேஜ் சர்ச்சில் இருந்து அதிகாரப்பூர்வமாக அகற்றப்பட்டாலும், அதை திரும்ப பெற பல்வேறு வழிகள் உள்ளன.

1. View Image extension

View Image extension என்ற நீட்டிப்பை உங்களின் பிரௌசரில் பயன்படுத்துவதன் மூலம் View image என்ற ஆப்ஷனை மீண்டும் நீங்கள் பெற முடியும். இந்த நீட்டிப்பு (Extension) Google Chrome மற்றும் Firefox க்கு கிடைக்கிறது.

2. Startpage

View image என்ற ஆப்ஷனை பெற மற்றொரு வழி Startpage வலைத்தளத்திற்கு செல்க, இதில் View image என்ற ஆப்ஷனை நாம் பெற முடியும், இதற்கு எவ்வித நீட்டிப்பும் (Extension) தேவை இல்லை.

3. Other search engines

Microsoft Bing மற்றும் Duck Duck Go போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் படங்களை ஒரு கிளிக்கில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

4 thoughts on “இங்க இருந்த வியூ ஆப்ஷன் எங்கப்பா அதிருப்தியில் கூகுள் பயனாளிகள்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்