Winamp மீடியா பிளேயர், 20 ஆம் நூற்றாண்டின் மிக பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று, காலப்போக்கில் இதன் பயன்பாடு மறைந்து போனது, வரும் ஆண்டில் பொது மாதிரியான ஆடியோ வடிவங்கள் மட்டும் இல்லாமல், உங்கள் இசை டிராக்குகள், பாட்காஸ்ட்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை இயக்கும் திறனைக் கொண்டு புது பொலிவுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வர இருக்கிறது Winamp மீடியா பிளேயர்.

Winamp மீடியா பிளேயர் டெஸ்க்டாப்புகளுக்கான எம்பி 3 பிளேயராக பிரபலமாக இருந்த போதினும், இப்போது உள்ள தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தும் வகையில் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக Radionomy நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் டெஸ்க்டாப்புகளுக்களில் Winamp மீடியா பிளேயரை 100 மில்லியன் பேர் தற்பொழுது பயன்படுத்தி வருகிறார்கள், கடைசியாக 2013 ஆம் ஆண்டு இதற்கான அப்டேட் வழங்கப்பட்டது. இனி அடுத்த வருடம் இதற்கான அப்டேட்கள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Radionomy நிறுவனத்தின் CEO அலெக்ஸாண்டிர சபவுண்ட்ஜியன் தெரிவிக்கையில், சீரமைக்கப்பட்ட வின்ஆம்ப் மீடியா பிளேயரின் புதிய பதிப்பு Google Play Music மற்றும் Spotify போன்ற சேவைகளையும் ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார்.

நினைவுபடுத்த, வின்ஆம்ப் முதலில் Nullsoft நிறுவனத்திற்கு சொந்தமானது, பின்னர் 1999 இல் AOL நிறுவனத்திற்கு விற்றக்கப்பட்டது. பின் 2014 ஆம் ஆண்டில், Radionomy என்ற நிறுவனம் வின்ஆம்ப் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளை AOL நிறுவனத்திடம் இருந்து வாங்கியது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்