90 களில் பிறந்தவர்களுக்கு, விண்டோஸ் 95 ஒரு சிறப்பான அனுபவமாக இருந்திருக்கும்.

இதன் தனிப்பட்ட இயக்க அமைப்பு எப்போதும் நம்முடைய இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தை பிடித்திருக்கிறது.

இதில் உள்ள MS Paint மற்றும் Solitaire போன்றவை நம்முடைய பழைய நாட்களை மீண்டும் நமக்கு நினைவுபடுத்தும்.

தற்போது விண்டோஸ் 95 மீண்டும் மறு உருவமாக ஒரு செயலியாக வந்துள்ளது, இதனை மேக், விண்டோஸ் மற்றும் லினக்ஸில் பயன்படுத்தலாம்.

இதன் அளவு 129mb கோப்புகள், இதனை GitHub இலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.

மகிழ்ச்சியுடன், ஒரு சோகமான செய்தி Minesweeper மற்றும் Internet Explorer போன்றவற்றை இதில் பயன்படுத்த இயலாது.

இதனை பதிவிறக்கம் செய்ய Windows 95 on GitHub

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்