Razer என்ற ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சியோமி நிறுவனம் Black Shark என்ற கேமிங் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தியது.

சமீபத்தில், இதன் உலகளாவிய வெளியீடு குறித்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது சியோமி. புதிய சியோமி பிளாக் ஷார்க் வரும் அக்டோபர் 23 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பிளாக் ஷர்க் 2 என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை, ஒருவேளை இது Black Shark இன் வேரியண்ட் மாடலின் உலகளாவிய வெளியீடாக இருக்கக்கூடும்.

Black Shark 2 மொபைல் குறித்து வெளியில் கசிந்துள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து காண்போம்.

Black Shark ல் இருப்பது 5.99 இன்ச் Full-HD+ டிஸ்ப்ளே. இதில் Android 8.1 Oreo இயங்குத்தளத்தை பயன்படுத்தியிருக்கிறது சியோமி. Qualcomm Snapdragon 845 SoC புராஸசருடன் இணைந்து Adreno 630 GPU-ம் வருகிறது. 4,000mAh பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8 GB ரேம் வசதியை கொண்டுள்ளது.

மேலும் மொபைலின் மேம்பட்ட கேமிங் அனுபவத்திற்காக பிரத்யேக திரவ குளிர்விக்கும் தொழில்நுட்பம் (Liquid Cooling Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் பிளாக் ஷார்க் மொபைலின் விலை குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால் நினைவுகூர, முதல் பிளாக் ஷார்க் மொபைல் போனின் தொடங்க விலை ரூபாய் 31,100 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்