ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனியில் உள்ள சீன நிறுவனமான ஜியோமி, கடந்த ஆண்டு Xiaomi Mi Mix 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இதன் அடுத்தப் பதிப்பான Xiaomi Mi Mix 3 ஸ்மார்ட்போன் வரும் 25-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்ற தகவல் ஜியோமி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோமி நிறுவனம் இதனை 10GB ரேம் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி வசதியுடன் வருகிறது.

ஜியோமி நிறுவன நிர்வாகி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ள தகவலின் அடிப்படையில் இதில் உள்ள பிற சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை காண்போம்.

ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 3D பேஸ் அன்லாக் வசதி, FHD + AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஐந்து வேரியண்டுகள் விற்பனைக்கு வர உள்ளன, அவை

  • 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி
  • 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி
  • 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி
  • 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி
  • டாப் ஏண்ட் மாடலான 10ஜிபி ரேம் கொண்ட மொபைல் போன் இருக்கும்.

மேலும் ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 மொபைல் போனின் விலை குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்