சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஷியோமி தனது மற்றோரு சேவையான Mi Pay வினை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஷியோமி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU வுடன் இணையவுள்ளது.

சீனாவில் இதன் பயன்பாடு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இந்தியாவில் அறிமுகமாகும் Mi Pay வில் NFC தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இது ஏற்கனவே இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கூகுள் பேவினை போல இருக்கும்.

UPI சேவையான Mi Pay வினை இந்தியாவில் பயன்படுத்த NPCI (National Payments Corporation of India) தற்போது அனுமதி அளித்துள்ளது. இதில் பேடிஎம் மற்றும் கூகுள் பேவில் உள்ளது போன்று QR ஸ்கேனிங் மற்றும் UPI அட்ரஸ் மூலம் பேமென்ட் பண்ண முடியும், மேலும் இதில் ரீசார்ஜ் மற்றும் பில் கட்டுதல் போன்ற சேவைகளும் உள்ளன.

வேறு புதிதாக என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது கண்டிப்பாக தற்போது இந்தியாவில் பிரபலமாக உள்ள பேடிஎம் மற்றும் கூகுள் பேவிற்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இப்போ எங்கு பார்த்தாலும் UPI சேவையை பயன்படுத்தி தான் பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் இந்த UPI சேவை பாதுகாப்பானதா என்று,

UPI சேவை பாதுகாப்பானது தான் என்றாலும் இது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை, UPI தொடர்பான மோசடிகளிலிருந்து தப்பிக்க உங்களின் டெபிட் / கிரெடிட் கார்டு தகவல்கள், பின் நம்பர்கள் மற்றும் OTP போன்ற தகவல்களை யாரிடமும் ஷேர் செய்ய வேண்டாம். வங்கிகளே இந்த தகவல்களை உங்களிடம் கேட்க மாட்டார்கள் எனவே உஷாரா இருங்கள்.

முடிந்த வரை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சிம் இருந்தாலே போதும் மோசடி செய்வது எளிதாகிவிடும். அடுத்து உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் புதிய செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது அவை உங்கள் எஸ்.எம்.எஸ் களைப் பார்க்க அனுமதி கேட்கும், அதில் பாதுகாப்பான முக்கிய செயலிகளுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள். சில சமயங்களில் இதனால் கூட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்