பண்டிகைகளை கொண்டாடும் விதமாக ஆன்லைன் வர்த்தக தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசானின் கிரேட் இண்டியன் சேல் இரண்டிலும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

அதில் முன்னணியில் இருப்பது சீனா தயாரிப்பு நிறுவனமான சியோமி, கடந்த இரண்டரை நாட்களில் 25 லட்சம் மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்துள்ளது.

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சியோமியின் தயாரிப்புகள்
Mi LED TVs, Mi Band 3, Mi Power Banks, Mi Earphones, Mi Routers மற்றும் Mi நிறுவனத்தின் உதிரி பாகங்கள்.

கடந்தாண்டு பண்டிகை கால விற்பனையில் சியோமி நிறுவனம் பத்து லட்சம் பொருட்களை விற்பனை செய்து இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது.

சியோமி இந்தியாவின் தலைமை நிர்வாகி பேசுகையில், இந்த வருடம் இரண்டரை நாட்களில் 25 லட்சம் பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு சியோமியின் தயாரிப்புகளில் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டது Redmi 6A மொபைல் போன் தான், மேலும் 1,00,000 Mi LED TV-க்கள் மற்றும் 4,00,000 Mi எக்கோ சிஸ்டம் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்