1998ம் ஆண்டு முதன் முறையாக தகவல்களை பரிமாறுவதற்கு என யாஹூ மெசஞ்சர் (Yahoo Messenger) அறிமுகமானது.

ஆரம்பத்தில் யாகூ பேஜர் (Yahoo Pager) என்ற பெயரிலும். பின்னாளில் இது யாஹூ மெசஞ்சர் (Yahoo Messenger) என்றும் மறுபெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.

இது வாட்ஸாப்ப், பேஸ்புக்-மெசஞ்சர் போன்ற சாட்டிங் app-களுக்கு எல்லாம் முன்னோடியாக கருதப்படுகிறது. யாஹூவை 90களில் மிகவும் அதிகமானோர் பயன்படுத்தினர்.

தற்போது வாட்ஸாப்ப் , பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் ஹேங்கவுட் (Google Hangouts) என பல சாட்டிங் app-கள் வெளிவந்துவிட்ட காரணத்தினால் யாஹூவின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது, இதனால் ஜூலை 17ம் தேதியுடன் யாஹூ மெசஞ்சரின் சேவை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

பயனாளர்களின் கணக்குகளை ‘ஸ்குரில்’ (Squirrel) எனும் அதன் புதிய மெசஞ்சருக்கு திருப்பி விடுவதாக யாஹூ நிறுவனம் கூறியுள்ளது.

யாஹூ மெசஞ்சர் போன்ற அதே அம்சங்களைக் கொண்டது, ஸ்குரில் மெசஞ்சர் ( Squirrel) என யாஹூ தெரிவிக்கிறது

இந்த ஸ்குரில் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் IOS இயங்கு தளங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்