காலை எழுந்தவுடன் செய்திகளுக்காகவும், இசைக்காகவும் யூடியூபை பயன்படுத்துவோர் ஏராளம். அந்த அளவுக்கு யூடியூபை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆனால் இன்று காலை அனைத்து யூடியூப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கூகுளின் பிரபல சமூக வலைதளமான YouTube தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது.

இதனால் யூடியூபின் மற்ற சேவைகளான யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக்கை பயன்படுத்துவதிலும் சிக்கல் நிலவியது.

இதையடுத்து, சர்வர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணியில் யூடியூபின் உயர்நுட்ப வல்லுனர் குழு ஈடுபட்டனர், இந்நிலையில் யூடியூப் இணையதளம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. மேலும் இன்று நடந்த தொழில்நுட்ப கோளாறுக்கு யூடியூப் குழு யூடியூப் பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்