இன்றைய காலக்கட்டத்தில் ஹேஷ்டாக் (#) என்ற சொல் சமூக வலைத்தளங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தொடங்கி கூகுள் ப்ளஸ் வரையிலும் இதன் தாக்கம் உள்ளது.

தற்போது இதனை யூடுபிலும் பயன்படுத்தலாம் என கூகுள் அறிவித்துள்ளது.

இனி யூட்யூபில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது இந்த ஹேஷ்டாக்குகளை பயன்படுத்தலாம், இதனால் இந்த குறிப்பிட்ட ஹேஷ்டாக்குகளை பயன்படுத்தி அதைச் சார்ந்த மற்ற வீடியோக்களை எளிதில் பார்க்கலாம்,

இந்த வசதியை இணையத்திலும் ஆண்ட்ராய்டு மொபைல் போனிலும் பயன்படுத்த முடியும்.
இந்த வசதி மிக விரைவில் ஐபோன்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஹேஷ்டாக்குகளை உருவாக்குவதற்கு ‘#’ என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும், ஹேஷ்டாக்குகளை பயன்படுத்தும் போது எழுத்துக்களுக்கு நடுவில் இடைவெளி இருக்கக் கூடாது என்பது போன்ற வரைமுறைகளை கூகிள் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்