யூடியூப் தனது புதிய சேவையை அறிமுகம் படுத்துவதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் வீடியோ இணையத் தளமான யூடியூப் தற்போது இசைக்கென ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது, இது யூடியூப் மியூசிக் (YouTube Music) என்றழைக்கப்படுகிறது.

இதில் உள்ள கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial intelligence) பாடல்களை அதன் விளக்கங்களின் (lyrics and descriptions) அடிப்படையில் தேட உதவுகிறது.

இதில் இலவசமாகவும், பணம் செலுத்தியும் (Subscription service) லட்சக்கணக்கான பாடல்களைக் கேட்டு மகிழலாம்.

2015 இல் யூடியூப் மியூசிக் பயன்பாடு வெளியிடப்பட்டது, ஆனால் இதன் பயன்பாடு குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உள்ளது, உதாரணமாக ஆஸ்திரியா, ஆஸ்திரியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், யுனைடெட் கிங்டம் ,யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் இன்னும் சில, விரைவில் இவ்வசதி இந்தியாவிலும் அறிமுகம் படுத்தப்படயுள்ளது.

2 thoughts on “வரப்போகிறது யூடியூபின் புதிய சேவை”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்